Thursday, December 01, 2005

விதியின் விளையாட்டு

"சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே "

இப்படித்தாங்க எல்லா தடவையும் ஆரம்பம் ஆகுது .பசங்க எத்தினி தபா தொலஞ்சு போறாங்க, அதுக்கு ஒரு கணக்கே இல்ல.அந்த பொண்ணு யாரு,என்ன பேரு,எதுவும் தெறியாது,மனசு மட்டும் எப்படி தொலஞ்சு போகுது? அதாங்க ஒரு பெரிய அதிசயம் இந்த உலகத்துல.

ஆனா பாறுங்க, இவன மட்டும் தப்பு சொல்ல கூடாது,இவன மாதிறி தான் நிறைய பசங்க அலையறாங்க, ச்சி, இருக்காங்க.இதுல சுவாரசியமான விஷயம் என்னான்னு கேட்டீங்கன்னா, இவன் எவ்வளவு தான் ட்ரை பண்ணிணாலும், பிகர் ஒரு தபா கூட கைல சிக்க மாட்டேங்குது.பிகர் என்ற ஆங்கில சொல்லுக்கு "கிட்டாத பொருள்" என்று அர்த்தமோ? சரி, பிகர் தான் கிடைக்கல, பையன் சும்மா இருப்பானா? மாட்டான், மாட்டவே மாட்டான். என்ன ஒரு தன்னம்பிக்கை, என்ன ஒரு தன்னம்பிக்கை!

"எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே! "


அதாங்க பசங்க கொள்கை.பிகர் தான் கிடைக்கல,மத்த பொண்ணுங்கலயாவது கரைக்ட் பண்ணலாம்ணு பாத்தா, அங்கயும் ஆப்பு தான்டி!அந்த பொண்ணுங்க:

அ) ரொம்ப அடக்கம் ஒடுக்கமா இருக்காங்க,பேசுவதற்கே ஆயிரம் கிலோ பொன் கொடுக்கணும்.
ஆ) ரொம்ப் ட்ரை பண்ணினா,அப்பா,அண்ணா,முறைமாமன்,மேனேஜர், இல்ல போலீஸ் இவங்க கிட்ட போட்டு குடுத்திடறாங்க
இ) இது இரண்டுமே இல்லேன்னா, இவங்க பின்னாலேயும்,நாய் மாதிறி நாலு பேர் அலையறாங்க.

பையன் பாவம், என்ன தான் செய்வான்?சொல்லுங்க.சைட் அடிக்கும் பிகர் எல்லாத்துக்கும் கல்யாண்ம் வரிசையா நடக்குது.பையன் தவறாம,

"எங்கிருந்தாலும் வாழ்க, உன் உள்ளம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க, உன் மங்கள குங்குமம் வாழ்க
வாழ்க வாழ்க"

அப்படின்னு கல்யாண ரிசப்ஷென்ல பாடறான்.நல்லா மூக்கு பிடிக்க கல்யாண சாப்பாட்ட ஒரு வெட்டு வெட்டறான்.சோகம் பாதி போச்சா, அதுக்கப்பறம்,திரும்பி மீதி பாட்ட பாட வறான். பாட ஆரம்பிக்கிறான்:

"சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே "

அடுத்த பிகரை பார்த்த எபெக்ட் !

பி.கு:அடுத்தடுத்து இந்த மூன்று பாடல் வறிகள் மனசுல தோனிச்சுங்க.அத வெச்சு பையன ரொம்ப படுத்திட்டேன்.

3 Comments:

Blogger Venkat said...

This comment has been removed by a blog administrator.

December 02, 2005 10:30 AM  
Blogger Venkat said...

தலைவா,
Bahara-ல spell-check இல்லீங்களா?

December 02, 2005 10:32 AM  
Blogger Zealous Zygote said...

@வெங்கட்
தொண்டா, என் வலைப்பதிவின் தலைப்பை நீங்க கொஞ்சம் பாருங்க. நான் நீங்க தந்த 'தகடூர'த்தான் உபயோகிக்கிறேன்,Barahaவை இல்ல. பிழை ஏதாவது இருந்தா சொல்லுங்க,திருத்திக்கிறேன்

December 03, 2005 2:02 PM  

Post a Comment

<< Home